இன்று கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,
பள்ளி அளவிலான கலைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு சா ராஜேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சுந்தரராஜன், சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை, இப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் வரவேற்று பேசினார் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு முருகன் அவர்கள் விழாவினை தலைமை ஏற்று நடத்தினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு சி செல்வமணி நன்றி உரை கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





0 Comments